இந்தியா செய்தி

டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் கடந்த சில நாட்களாக பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, பொலிஸார் சோதனை நடத்திய போது மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்றும் பல பாடசாலைகளுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர்.

தகவலறிந்த பொலிஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் மீண்டும் பொய்யானது சென்று தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி