வட அமெரிக்கா

புளோரிடா விமான நிலையத்திற்கு மண்டையோட்டுடன் வருகை தந்த பயணியால் அதிர்ச்சி!

அமெரிக்காவின் புளோரிடா விமான நிலையத்தில் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் மண்டையோட்டுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளோரிடாவின் டம்பா சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது குறித்த மண்டையோடு மீட்கப்பட்டதாக  அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சடங்குகளின் குறிப்பிட்ட தன்மை CBP ஆல் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், இந்த பொருட்கள் ‘சடங்குகளுக்கானவை’ என்று பயணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடுமையான உடல்நல அபாயங்கள் காரணமாக அதிகாரிகள் எச்சங்களை கைப்பற்றி அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் குறித்த பயணி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வாரா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் தகனம் செய்யப்பட்ட அல்லது எம்பாமிங் செய்யப்பட்ட எச்சங்களைத் தவிர பிற மனித எச்சங்களை கொண்டு செல்லும்போது இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வலைத்தளம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Pictures shared by Martel showed CBP officials wearing gloves as they examined the luggage

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்