ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் – பயணிகளின் கவனத்திற்கு!

ஐரோப்பாவின் சில முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக விமான பயணிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த சைபர் தாக்குதலானது செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெர்லினின் பிராண்டன்பர்க் விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் கையாளும் அமைப்புகளுக்கான சேவை வழங்கும் அமைப்பு வெள்ளிக்கிழமை (19) தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையமும் பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான லண்டன் ஹீத்ரோ விமான நிலையமும் , செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான சேவை வழங்கும் அமைப்பை”தொழில்நுட்ப சிக்கல்” பாதித்ததாக கூறியது.
இந்நிலையில் இன்று (20.09) சர்வதேச பயணங்களை எதிர்கொள்ள நேரிடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.