ஐரிஷ் மொழி ராப் குழுவிற்கு தடை விதித்த கனேடிய அரசாங்கம்!

ஐரிஷ் மொழி ராப் குழுவான நீகேப்பிற்கு கனடா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அந்தக் குழு அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறியது.
ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா போன்ற போராளிக் குழுக்களை பிரபல்யப்படுத்துவதுபோல் தோன்றும் அரசியல் அறிக்கைகளுக்காக இந்தக் குழு விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஹங்கேரி அரசாங்கம் அந்தக் குழுவைத் தடை செய்திருந்தது.
குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாடாளுமன்றச் செயலாளரான லிபரல் சட்டமன்ற உறுப்பினர் வின்ஸ் காஸ்பரோ, நீகேப் “ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பகிரங்கமாக ஆதரவைக் காட்டியுள்ளது”, இது கலை வெளிப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“வெறுப்புப் பேச்சு, வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதை கனடா உறுதியாக எதிர்க்கிறது” என்றும் அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.