கரீபியன் கடற்பகுதியில் படகொன்றின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப்!

கரீபியனில் சர்வதேச கடல் பகுதியில் படகொன்றின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்குதல் உத்தரவை பிறப்பித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படுபவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதில் 03 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக ஏற்கனவே இரண்டு முறை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் எப்போது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் ட்ரம்பின் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
இதேவேளை அமெரிக்காவின் தெற்கு கட்டளையின் பொறுப்பில் தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் கடல் ஆகியவை அடங்குகின்றன. அப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்கள் அதிகளவில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.