பெண்கள் புத்தகம் எழுதுவதற்கும் ஆப்கானிஸ்தானில் தடை

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் பெண்கள் எழுதிய புத்தகங்களைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி, “ஷரியா எதிர்ப்பு மற்றும் தாலிபான் கொள்கைகள்” என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய 680 புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
அவற்றில், “வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு” போன்ற தலைப்புகளைக் கொண்ட சுமார் 140 புத்தகங்களும் இந்தத் தடையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வாரம் மட்டும், தாலிபானின் உச்ச தலைவரின் உத்தரவின் பேரில் சுமார் 10 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணையம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தாலிபான் விதிகளின் கீழ் பெண்கள் மற்றும் யுவதிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வியை அணுக அனுமதிக்கப்படுகிறார்கள். கூடுதலாக, 18 பல்கலைக்கழக பாடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் அங்கு பெண்கள் முக்கிய இலக்காக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.