கேள்வியால் கோபமடைந்து ஊடகவியலாளரை திட்டிய டிரம்ப்!

ஆஸ்திரேலிய முக்கிய ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோபமடைந்து திட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இந்த நாட்களில் பிரித்தானியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோதே ஊடகவியலாளரை திட்டியதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் செல்வம் மற்றும் வணிக நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட பின்னர், ஊடகவியலாளருடன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும் அதற்கு பதிலளிக்கும் விதமாக, தனது பிள்ளைகள் தனது தொழிலை நடத்துவார்கள் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
செல்வம் குறித்த கேள்வியால் கோபமடைந்த டிரம்ப்,“நீங்கள் ஆஸ்திரேலியாவை காயப்படுத்துகிறீர்கள்” குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விரைவில் பிரதமர் அல்பானீஸைச் சந்தித்து ஊடகவியலாளர் பற்றி அவரிடம் கூறுவேன் எனவும் டிரம்ப் ஊடகவியலாளரிடம் கூறியுள்ளார்.