இந்தியாவில் அச்சுறுத்தும் மூளையை தின்னும் உயிரணு – அதிகரிக்கும் பாதிப்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் அபாயகரமான மூளையை தின்னும் உயிரணு வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
அந்த அரிய வகை உயிரணுவால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 36 சம்பவங்களும் 9 மரணங்களும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 69 சம்பவங்களும் 19 மரணங்களும் பதிவானதாக மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.
சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல என்றும் சொல்லப்பட்டது.
கடந்த மாதம் 3 மாதக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பெரும் சுகாதாரச் சிக்கலைக் கையாள அதிகாரிகள் சோதனைகள் மேற்கொள்கின்றனர்.
உயிரணுக்கள் நீர்நிலைகளில் தழைப்பதால் அவற்றை அகற்றும் முயற்சியாகப் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் குளோரின் கலக்கப்படுகிறது.
(Visited 4 times, 4 visits today)