அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள பிட்காயின் வைத்திருக்கும் டிரம்பின் தங்கச் சிலை

அமெரிக்காவின் 47வது தலைவரான டொனால்ட் டிரம்ப் பதவியேற்று பல திட்டங்கள் மற்றும் அமெரிக்க அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் டிரம்ப் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் டிரம்பின் 12 அடி உயரமுள்ள தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர். இந்த சிலை பிட்காயினை கையில் ஏந்தி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிலையை நிறுவியவர்கள், “டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதிச் சந்தைகளில் அமெரிக்க அரசின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டுவதே எங்களின் நோக்கம். டிரம்பின் கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையான ஆதரவை இந்த சிலை வெளிப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)