பிரான்ஸில் தூங்கிய விமான கட்டுப்பாட்டாளர் – தரையிறங்க முடியாமல் தவித்த விமானம்!

பிரான்ஸில் விமானம் ஒன்று தரையிறங்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில் பணியில் இருந்து விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தூங்கிவிட்டதால் அவ்விமானம் சுமார் 18 நிமிடங்கள் வானில் வட்டமடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு கோபுரம் விமானத்தின் வானொலி அழைப்புகளுக்கு பதிலளிக்கத் தவறியதால், அவ்விமானம் கோர்சிகா வான்வெளியில் வட்டமடிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு மத்தியதரைக் கடல் தீவின் மறுபுறத்தில் உள்ள பாஸ்டியா நகரத்திற்கு விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளது.
மேலும் பணியில் இருந்த நபரை எழுப்புவதற்காக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
பாரிஸிலிருந்து அஜாசியோவில் உள்ள விமான நிலையத்திற்கு பயணித்த Corsica Airbus A320 என்ற விமானமே மேற்படி சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளது.