வடகொரியாவில் இருந்து வெளியேறும் மக்கள் தொடர்பில் தென்கொரியா காட்டும் கரிசனை!

வடகொரியாவில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழும் மக்கள் சில சந்தர்ப்பங்களில் அங்கிருந்து தப்பிச் சென்று வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு தப்பி வரும் மக்களை defectors என அழைப்பதை நிறுத்த வேண்டும் என தென்கொரியா வலியுறுத்துகிறது.
இந்த சொற்பிரயோகமானது எதிர்மறையான அர்த்தத்தை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளுக்குப் பொறுப்பான அரசாங்க அமைப்பான தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் இதனை மதிப்பாய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கிலிருந்து தப்பியோடிய மக்கள் என்று பொருள்படும் “தல்புக்மின்” என்ற தென் கொரியப் பெயர், சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கான” மாற்றுச் சொல்லாக மாற்றப்படும் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)