ஆஸ்திரேலியா – குயின்ஸ்லாந்தில் மறுஅறிவிப்பு வரும் வரை முகக்கவசம் அணிய உத்தரவு!

வடமேற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாப் பகுதியில் தட்டம்மை பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கெய்ர்ன்ஸுக்கு அதிகாரிகள் அவசர பொது சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களில் 06 பேர் தொற்று பாதிப்புடன் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெய்ர்ன்ஸ் மருத்துவமனை, CBD, பல்பொருள் அங்காடிகள், ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் தொற்று பரவலுக்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீவிர சிகிச்சை, மகப்பேறு மற்றும் சிறப்பு பராமரிப்பு நர்சரி, புற்றுநோய் பராமரிப்பு வார்டு மற்றும் மையம் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)