லக்னோவில் தொலைபேசி விளையாட்டால் 14 லட்சத்தை இழந்த 14 வயது சிறுவன் தற்கொலை

இரண்டு நாட்களுக்கு முன்பு லக்னோவில் தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுவன், கடந்த இரண்டு மாதங்களாக தொலைபேசி விளையாட்டில் அடிமையாகி, தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து 14 லட்சத்தை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“விசாரணையின் போது, மருத்துவ சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த 14 லட்சத்தை இழந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தந்தை அவரைத் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்று அதிகாரி நிபுன் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணைய பயன்பாடு மற்றும் வங்கிக் கணக்கு அணுகலைக் கண்காணித்து, சைபர் தொடர்பான அபாயங்கள் குறித்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெற்றோர்கள், குறைந்தபட்சம் குழந்தைகள் எந்த வகையான ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும், கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோருடன் இணைக்கப்பட்ட கணக்குகளை உன்னிப்பாகக் கண்காணித்து சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.