AsiaCup M10 – தாமதமாக ஆரம்பமான பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக போட்டி

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி மட்டும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.ஹாங்காங், ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம் காரணமாக இன்றைய ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு வருகை தந்ததனால் சிறிது கால தாமதமாக போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.