ஐரோப்பாவிற்கு அழைத்துவரப்பட்ட 50 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 16 பேர் கைது!

ஆட்கடத்தல்காரர்களால் ஐரோப்பாவிற்கு படகு மூலம் கடத்தப்பட்ட மக்களில் 50 பேர் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
248 உயிர் பிழைத்தவர்கள் ஆப்பிரிக்க கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டு கிரான் கனேரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தகவல் கசிந்துள்ளது.
ஆட்கடத்தல்காரர்கள் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு உணவு தீர்ந்து போகத் தொடங்கியபோது, புலம்பெயர்ந்தவர்களை தாக்கியதாகவும், அவர்களை சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றதாகவும் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் 16 செனகல் நாட்டவர் மற்றும் ஒரு காம்பியன் நாட்டவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)