200க்கும் மேற்பட்ட AI ஒப்பந்ததாரர்களை பணிநீக்கம் செய்த கூகுள்

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஜெமினி மற்றும் AI உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பணிநீக்கங்கள் கடந்த மாதம் இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளன, மேலும் முன் எச்சரிக்கை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டன. பல ஒப்பந்தக்காரர்கள் தங்கள் வேலையிலிருந்து திடீரென நிறுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களில் பலர் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளில் முதுகலை பட்டங்கள் மற்றும் அனுபவம் பெற்றவர்கள்.
“இந்தப் பணிநீக்கங்களுக்கு கூகுள் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இந்த ஊழியர்கள் குளோபல் லாஜிக் அல்லது அதன் துணை நிறுவனங்களின் ஊழியர்கள், கூகுளின் ஊழியர்கள் அல்ல. பணியாளர்களின் வேலை மற்றும் வேலை நிலைமைகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு” என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கோர்ட்னி மென்சினி குறிப்பிட்டுள்ளார்.