பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமருக்கு பரிசு அனுப்பிய அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான்

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.
மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க உள்ளார்.
டிசம்பர் 13ம் திகதி இந்தியா வரும் மெஸ்ஸி தில்லி, மும்பை, கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.
நாளை பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)