இந்தியாவில் காற்று மாசுப்பாட்டால் அழிந்து வரும் பிரபல நினைவுச்சின்னம்!

இந்திய தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு ஏற்பட்டுள்ள அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக முகலாய கால நினைவுச்சின்னங்களில் ஒன்றான செங்கோட்டையின் சுவர்களில் “கருப்பு மேலோடு” உருவாக வழிவகுத்துள்ளதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
0.05 மிமீ முதல் 0.5 மிமீ வரை தடிமன் கொண்ட ஒரு படலம் உருவாகியுள்ளதாகவும், , எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அதன் சிக்கலான சிற்பங்களை சேதப்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
17 ஆம் நூற்றாண்டின் நினைவுச்சின்னத்தில் காற்று மாசுபாட்டின் விளைவுகளை விரிவாக ஆய்வு செய்த முதல் ஆய்வு இதுவாகும்.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 5 visits today)