சீனாவில் உள்ள இரண்டு பிரபல கேட்டரிங் நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கில் அபராதம் விதிப்பு!

சீனாவில் உள்ள இரண்டு பிரபல கேட்டரிங் நிறுவனங்களுக்கு 2.2 மில்லியன் யுவான் ($309,000; £227,000) செலுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹாட்பாட் உணவகத்தில் குழம்புப் பானையில் இரண்டு இளைஞர்கள் சிறுநீர் கழித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹைடிலாவோவின் ஷாங்காய் கிளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாரும் மாசுபட்ட குழம்பை உட்கொண்டதாக எந்தக் குறிப்பும் இல்லை, ஆனால் சம்பவத்திற்குப் பிறகு குறித்த நாளில் உணவகத்தில் உணவருந்தியவர்களுக்கு ஹைடிலாவ் பணம் கொடுக்க முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கை விசாரணை செய்த ஷாங்காய் நீதிமன்றம், டீனேஜர்கள் “அவமதிப்புச் செயல்கள்” மூலம் நிறுவனங்களின் சொத்துரிமைகளையும் நற்பெயரையும் மீறியதாகக் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)