காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இடம்பெறும் இனப்படுகொலை – ஐ.நா சுட்டிக்காட்டு!

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து இந்த இனப்படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நா சபை வெளியிட்டள்ள அறிக்கையில், ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளின் நடத்தை முறையை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
(Visited 3 times, 3 visits today)