இலங்கையில் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான லொறி – 15 பேர் படுகாயம்!
ஹொரணை-இரத்னபுர பிரதான வீதியில், எபிடவல பகுதியில் இன்று (16) காலை தனியார் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் மொத்தம் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





