06 மாதங்கள் மட்டுமே பதவி வகிப்பேன் – நேபாள பிரதமர் அறிவிப்பு!

நேபாளத்தில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசிலா கார்க்கி 06 மாதங்கள் மாத்திரமே பதவியில் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பிறகு முதல் முறையாக பேட்டியளித்த அவர், அடுத்தாண்டு மார்ச்05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கத்திடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஊழலை முடிவுக்கு கொண்டு வருதல், நல்லாட்சி மற்றும் பொருளாதார சமத்துவத்தைக் கோரும் இளைஞர்களின் சிந்தனைக்கு ஏற்ப செயல்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேபாளத்தில் ஊழல் மிக்க அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து பிரதமரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கியிருந்தனர்.
இந்த போராட்டத்தில் 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)