நேபாளத்தில் போராட்டத்தின் போது தப்பியோடிய கைதிகளில் 3000ற்கும் மேற்பட்டோர் மீண்டும் கைது

நேபாளத்தில் அரசுக்கு எதிராக கடந்த 8ம் திகதி முதல் நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறையின்போது சிறைகளில் இருந்து 14000 மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.
அந்த வகையில் பல்வேறு சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ய பொலிஸார், ராணுவத்தினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற 3723 கைதிகளை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
மேலும் 10320 கைதிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் சிலர் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பதால் இந்திய அதிகாரிகளின் உதவியுடன் எஞ்சிய கைதிகளை கைது செய்யவும் நேபாள பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)