AsiaCup M06 – 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. பர்ஹான் 40 ரன்னும், ஷாஹின் அப்ரிடி 33 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 13 பந்தில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
(Visited 2 times, 2 visits today)