”நாங்கள் போரை விரும்பவில்லை” – ட்ரம்பின் வரிவிதிப்பிற்கு சீனா பதில்!

சீனா மீது 100 சதவீதம் வரிவிதித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தி வருகின்ற நிலையில் சீனா இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சீனா எந்தப் போர்களிலும் பங்கேற்பதில்லை, போர்களைத் திட்டமிடுவதும் இல்லை.
சீனா அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கிறது. மோதல் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வை எட்ட பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறது.
பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கும், ஐ.நா.சாசனத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் கூட்டாகப் பாதுகாப்பதற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)