வெனிசுலா பதட்டங்களுக்கு மத்தியில் ரிக்கோவில் தரையிறங்கியுள்ள அமெரிக்க போர் விமானங்கள்

புவெர்ட்டோ ரிக்கோவில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை எதிர்கொள்ளவும் வெனிசுவேலாவுடனான விரிசல் மோசமடைந்து வருவதாலும் கரீபியனில் அமெரிக்கா அதன் ராணுவத்தை குவித்து வருகிறது.
பத்து எஃப்-35 ரக போர் விமானங்களை புவெர்ட்டோ ரிக்கோவுக்கு அனுப்பிவைக்கும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.அதையடுத்து, சனிக்கிழமையன்று (செப்டம்பர் 13) ஐந்து எஃப்-35 ரக போர் விமானங்கள் புவெர்ட்டோ ரிக்கோவில் தரையிறங்கின.
அமெரிக்கத் தற்காப்பு அகைச்சர் பீட் ஹெக்செத் கடந்த வாரம் புவெர்ட்டோ ரிக்கோவுக்கு எதிர்பாராத விதமாகப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புவெர்ட்டோ ரிக்கோவில் நிறுத்திவைக்கப்படும் பத்து எஃப்-35 போர் விமானங்களைக் கொண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அமெரிக்காவுக்குக் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பிவைத்தபோதிலும் வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று அதிபர் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்தார்.
கடந்த வாரம் வெனிசுவேலாவிருந்து புறப்பட்டுச் சென்ற கப்பலில் இருந்த 11 பேரை அமெரிக்க ராணுவம் கொன்றது.அக்கப்பலில் போதைப்பொருள் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.