AsiaCup M05 – முதலில் பந்து வீசும் இலங்கை அணி

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் ஓவரில் ஒரு விக்கெட் மற்றும் இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட் என முதல் 5 விக்கெட்களை 40 ஓட்டங்களுக்கு இழந்து வங்கதேசம் தடுமாறியது.
தற்போது நிதானமாக விளையாடி வரும் வங்கதேச அணி 17 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றுள்ளது.
(Visited 2 times, 2 visits today)