யாழ்ப்பாண வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களான ஆண் சிசு உயிரிழப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயானா ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிசு நவாலி தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த கபில்நாத் பூஜிதா என்ற தம்பதிகளின் சிசுவாகும்.
கடந்த 7 ஆம் திகதி ஆண் சிசு பிறந்த நிலையில் குடல் சுழற்சி காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகவும் பின்னர் வியாழக் கிழமை (11) சிசு உயிரிழந்துள்ளது.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்
(Visited 2 times, 2 visits today)