ice cream, karaoke உள்ளிட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு தடை விதித்த வடகொரியா!

ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் பல வார்த்தைகளை வடகொரிய தலைவர் கிம்ஜொங் உன் தடை செய்துள்ளார்.
இதற்கமைய சுற்றுலா வழிக்காட்டிகள் வெளிநாட்டு பார்வையாளர்களிடம் பேசும்போது மேற்கு மற்றும் அதன் அண்டை நாடான தென் கொரியாவில் பிரபலமான சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ‘சுற்றுலாப் பயணிகளைக் கையாள்வது மற்றும் மகிழ்விப்பது குறித்து விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென் கொரிய வெளிப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு கடன் வார்த்தைகளைத் தவிர்த்து, வட கொரிய சொற்களஞ்சியத்தை உணர்வுபூர்வமாகப் பயன்படுத்த சுற்றுலா நிபுணர்களுக்குக் கற்பிப்பதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் கடுமையான பயிற்சித் திட்டத்தில் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகள், ஹாம்பர்கருக்கு டஜின்-கோகி கியோப்பாங் (மாட்டிறைச்சியுடன் இரட்டை ரொட்டி) என்றும், ஐஸ்கிரீமுக்கு எசுகிமோ (எஸ்கிமோ) என்றும் சொல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோல் கரோக்கி இயந்திரங்களை ‘ஆன்-ஸ்கிரீன் துணை இயந்திரங்கள்’ என்று அழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.