சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது வழங்கப்படும் என அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
(Visited 2 times, 2 visits today)