நேபாளத்தில் இடைக்கால பிரதமரை நியமிக்க முடியாத நிலை – தொடரும் இழுபறி

நேபாளத்தில் இடைக்கால பிரதமராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி மற்றும் சிக்கல் நிலை எழுந்துள்ளது.
அரசியலமைப்பு சட்டப்படி முன்னாள் நீதிபதிகள், அரசு பதவிக்கு வரக்கூடாது.
இதனால், இராணுவத்தின் ஆதரவு இருந்தும் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை இடைக்கால பிரதமராக ஏற்பதில் தயக்கம் காணப்படுகிறது.
போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர் குழுவினரில் ஒரு தரப்பு 70 வயது கடந்துவிட்ட சுஷிலா கார்க்கியை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதில் 54 வயதான மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைவர் குல்மான் கிஷிங்-கை பரிந்துரை செய்துள்ளனர்.
அவர், நேபாளத்தின் மின்வெட்டு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்து நற்பெயர் பெற்றவர்
(Visited 2 times, 2 visits today)