கொசுக்கள் பெரும்பாலும் யாரை கடிக்கிறது தெரியுமா? – ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!

நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கொசுக்களால் பாதிக்கப்பட்டிருப்போம். சில நேரங்களில் காய்ச்சல், டெங்கு தொற்று போன்ற பல நோய்களையும் எதிர்கொண்டிருப்போம்.
பெரும்பாலும் கொசுக்கள் யாரை கடிக்கிறது தெரியுமா? எப்படி பட்டவர்கள் மீது அதன் ஈடுபாடு அதிகரிக்கிறது தெரியுமா?
தற்போது ஆய்வாளர்கள் இது தொடர்பில் ஓர் ஆய்வை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் 500 பேர் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் முன்னதாக அருந்திய பானம், மற்றும் எவ்வாறான பழக்கவழக்கங்களை பின்பற்றினார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் ஓர் பரிசோதனை பெட்டியில் கையை வைத்து சோதித்து பார்த்துள்ளனர். அதில் பீர் குடிப்பவர்கள் கொசுக்களுக்கு 1.35 மடங்கு அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளனர்.
முந்தைய இரவில் ஒருவருடன் தூங்கியவர்களை, ஆனால் சன்ஸ்கிரீன் அணிந்தவர்களையோ அல்லது சமீபத்தில் குளிப்பதை தவிர்த்தவர்களையோ இந்தப் பூச்சிகள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
‘சன்ஸ்கிரீனைத் தவிர்ப்பவர்கள், பீர் குடிப்பவர்கள் மற்றும் படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்கள் மீது கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்’ என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.