உலக பணக்காரர்கள் பட்டியலில் சரிவை சந்தித்த மஸ்க் – திடீரென உயர்ந்த பங்குகளால் அடித்த அதிர்ஷ்டம்!

ப்ளூம்பர்க் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்து அசத்தினார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்தார்.
ஆரக்கிள் நிறுவன பங்குகளில் திடீர் உயர்வால் உலக பணக்காரர்களின் பட்டியலில் சில மணிநேரம் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்திருந்தார்.
தற்போது 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் தன்னுடைய முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
383 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் லேரி எல்லிசன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். 264 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 3 ஆம் இடமும் 252 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.