இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஆறு பேர் பலி

இந்தோனீசியாவின் பாலித் தீவில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் இந்த வாரம் குறைந்தது அறுவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் புதன்கிழமை (செப்டம்பர் 10) அன்று தெரிவித்தனர்.
மேலும், பரபரப்பான சுற்றுலா தளமாகத் திகழும் பாலித் தீவில் வெள்ளம் காரணமாகப் பயணங்கள் பலவும் தடைப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை முதல் 10 ஆம் தேதி காலை வரை பெய்த தொடர் கனமழையால் பாலித் தலைநகர் டென்பசாரில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்ததாகத் தீவின் தேடல், மீட்பு அமைப்பின் தலைவர் ஐ நியோமன் சிதகர்யா கூறினார்.
மழை காரணமாக ஜெம்பிரனா பகுதியில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக 85 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இந்தோனீசியாவின் பேரிடர் தணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 10 ஆம் தேதிவரை பாலித்தீவில் வெள்ளம் கடும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் இந்தோனீசிய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் மழை காரணமாக டென்பசார் அருகில் உள்ள தீவின் அனைத்துலக விமான நிலையத்திற்கு வருகையளித்தோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது எனவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்கின்றன.