கட்டார் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தனக்கு தொடர்பு இல்லை என அறிவித்த ட்ரம்ப்
கட்டார் மீதான இஸ்ரேலிய நடத்திய தாக்குதல்களுடன் தனக்கு தொடர்பு இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தாக்குதல்களை நடத்துவதற்கான முடிவு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் எடுக்கப்பட்டது, தான் அல்ல என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
கட்டாரில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்லாது என ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
தாக்குதல் நடந்த இடம் குறித்துத் தான் மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Truth Social பதிவில், கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸை இஸ்ரேல் தாக்குவதாக அமெரிக்க இராணுவம் தனக்குத் தெரிவித்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தாக்குதலை நிறுத்த மிகவும் தாமதமாகிவிட்டது என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.





