சிங்கப்பூரில் காதலியை தாக்கிய தமிழருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் காதலியை தாக்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலோக பறவை கூண்டால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
42 வயதான விக்னேஷ்வரன் ஜெகதீசன் என்ற அந்த நபர் லட்சுமி கார்த்திகா சுப்பிரமணியம் 39 வயதான பெண்ணுடன் காதல் உறவில் இருந்தார்.
அவர்களிடையே சில காலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. நாய் வளர்ப்பதில் தொடங்கிய வாக்குவாதம், 1 கிலோ எடையுள்ள உலோக கூண்டை தூக்கி எறியும் அளவிற்கு வளர்ந்தது.
அதாவது விக்னேஷ்வரன் கூண்டை லட்சுமி மீது வீசி தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த லட்சுமி, பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
அவரைக் குற்றவாளியாகக் கண்டறிந்த நீதிமன்றம், விஷ்ணேஸ்வரனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்தது. மற்றவர்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் செயல்பட்டதற்காகவும், பொலிஸ் அதிகாரி முன்பே லட்சுமிக்கு மிரட்டல் விடுத்ததற்காகவும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் லட்சுமிக்கு காயம் ஏற்படவில்லை, ஆனாலும் வன்முறை செயலுக்காக அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.