கியேவ் மீது இரவு முழுவதும் தாக்குதல் நடத்திய ரஷ்யா – குழந்த உட்பட மூவர் பலி!

கியேவ் மீது ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தாக்குதல்களில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகரில் அரசாங்க அலுவலகம் உட்பட ஏராளமான கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
கியேவின் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ, தாக்குதலுக்குப் பிறகு நகர மையத்தில் உள்ள அரசாங்க கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இது ட்ரோன்கள் மழை பொழிந்து, அதைத் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறினார்.
நகரின் பெச்செர்ஸ்கி மாவட்டத்தில் உள்ள கட்டிடத்திலிருந்து அடர்த்தியான புகை எழுவதை ராய்ட்டர்ஸ் சாட்சிகள் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)