அடுத்தாண்டு நடைபெறும் ஜி-20 மாநாட்டை தனது கோல்ப் ரிசார்டில் நடத்தப் போவதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் அடுத்தாண்டு டிசம்பரில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது.
இதனை, மியாமி நகரிலுள்ள தனது கோல்ப் ரிசார்டில் நடத்தப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபரான டிரம்ப் அதிபர் பதவியை பயன்படுத்தி தனது வருவாயை பெருக்கிவருவதாக விமர்சனங்கள் இருந்துவருகின்றன.
டிசம்பரில், கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி அனைத்து விடுதிகளிலும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் மாநாட்டை தனது ரிசார்டில் நடத்துவதாகவும், அதன் மூலம் லாபம் ஈட்டும் எண்ணம் தனக்கில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
2020-ல் அதிபராக இருந்தபோதும் ஜி-20 மாநாட்டை அதே ரிசார்டில் நடத்த திட்டமிட்டிருந்த டிரம்ப், எதிர்கட்சியினர் வைத்த ஊழல் குற்றச்சாட்டால் முடிவை கைவிட்டார்.





