இன்றைய முக்கிய செய்திகள்

காசாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள் – ஐ.நா. வேதனை

இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், 40,500 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதோடு, அவர்களில் பலர் கேட்கும், பேசும், பார்க்கும் திறன்களைக் கூட இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக, 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 1.32 லட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காசா மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 63,700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,61,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புகைப்பட பத்திரிகையாளர் மோதாஜ் அஜாய்ஜியா, 2023ல் காசாவின் முக்கிய சாலையை படம் பிடித்த வீடியோவையும், அதே சாலை இப்போது முற்றிலும் இடிக்கப்பட்டு காணப்படும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன