அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை அழித்து வரும் டிரம்ப் – எம்.பி குற்றச்சாட்டு

அமெரிக்கா-இந்தியா இடையேயான 30 ஆண்டுகால உறவை டிரம்ப் அழித்து வருவதாக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர் ரோகித் கண்ணா குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசைப் பரிந்துரைக்க பிரதமர் மோடி மறுப்பதால், அவர் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக ரோகித் கண்ணா குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு விதிக்கப்பட்டதை விட இந்தியா மீது 50% அளவுக்கு அதிகமான வரியை டிரம்ப் விதித்ததாகவும் அவர் சாடினார்.
இந்த வரிகள் அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய தோல் மற்றும் ஜவுளி ஏற்றுமதியை பாதித்துள்ளதாக ரோகித் கண்ணா கூறினார்.
டிரம்பின் கொள்கைகள் இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கித் தள்ளுகின்றன என்று முன்னாள் தூதர்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்
(Visited 7 times, 7 visits today)