ஆப்கான் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,400 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இது பெரும்பாலும் மலைகள் நிறைந்த இடமாகும்.இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை . நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 1,400 ஐ தாண்டியுள்ளது. 3,214க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருப்பதாகவும், 5,400 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் தாலிபான் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.