போர் சூழலுக்கு மத்தியில் ஒன்றிணையும் மூன்று முக்கிய நாடுகளின் தலைவர்கள்!

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் செவ்வாய்க்கிழமை சீன-வட கொரிய எல்லையை ரயிலில் கடந்து பெய்ஜிங்கிற்குச் சென்றுள்ளார்.
அங்கு நடைபேறும் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் நாளைய தினம் சீனத் தலைநகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கிம் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிம்முடன் வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுய் உள்ளிட்ட ஒரு குழுவும் வந்துள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2022 முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பை வலுப்படுத்துவதில் மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு குறித்த உக்ரேனிய மற்றும் மேற்கத்திய கவலைகளுக்கு மத்தியில் கிம், ஜி மற்றும் புடின் இராணுவ அணிவகுப்புக்காக ஒன்றுகூடுவார்கள் எனக் கூறப்படுகிறது.