மலேசியாவில் குழந்தை பாலியல் வதை கும்பலிடமிருந்து ஐந்து குழந்தைகள் மீட்ட காவல்துறை

சிறார் மீதான பாலியல் நாட்டம் கொண்ட கும்பலிடமிருந்து ஐந்து குழந்தைகளை ஜோகூர் காவல்துறை மீட்டுள்ளது. அவர்களில் இருவர் இரு மாதக் குழந்தைகள்.
பாலியல் வதை செய்து அதனைப் புகைப்படங்களாகவும் காணொளிப் படங்களாகவும் எடுக்க குழந்தைகளை அந்தக் கும்பல் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட குழந்தைகள் இரு மாதம் முதல் ஐந்து வயது வரையிலானவர்கள் என்று தெரிவித்த புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார், அந்தக் குழந்தைகள் சமூக ஊடகங்கள் வாயிலாக அக்கும்பலிடம் விற்கப்பட்டிருக்கலாம் என்றார்.
குழந்தைகளிடம் பாலியல் கொடுமையை கும்பல் நிகழ்த்தும் விதம் குறித்து இன்று (ஆகஸ்ட் 29) ஜோகூர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் எம். குமார் விவரித்தார்.
“கர்ப்பிணிப் பெண்களை நாடும் கும்பல், பிறக்கும் குழந்தைகளைத் தத்து எடுக்க விரும்புவதாகக் கூறி, அதற்காக 1,500 ரிங்கிட் முதல் 3,500 ரிங்கிட் வரை (S$460 முதல் S$1,070 வரை) பணம் கொடுக்கும்.
அவர்களின் பிரசவச் செலவுகளையும் அந்தக் கும்பலே ஏற்றுக்கொள்ளும்.பின்னர், குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை தேசிய பதிவுத்துறையிடம் பெறுவதற்கான முயற்சிகளில் அக்கும்பல் ஈடுபடும்.தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கிச் செல்லும் கும்பல் அந்தக் குழந்தைகளை பாலியல் வதைசெய்யும்.