பாகிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் 250,000 மக்கள் வெளியேற்றம்!

பாகிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக 250,000 மக்களை இடம்பெயர்த்ததாகவும், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பயிர்கள் மற்றும் வணிகங்கள் அழிக்கப்பட்டதாகவும், பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் நாளைய தினமும் மழையுடன் கூடிய வானிலையே தொடரும் என்றும் அடுத்த வாரம் முதல் இந்நிலைமை தொடர கூடும் எனவும் அதிகாரிகள் முன்னுரைதுள்ளனர்.
ரவி, சட்லெஜ் மற்றும் செனாப் நதிகளின் ஓரத்தில் அமைந்துள்ள 1,432 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டது, சுமார் 1.2 மில்லியன் மக்களை பாதித்தது மற்றும் 248,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்று மாகாண அமைச்சர் மரியம் ஔரங்கசீப் தெரிவித்தார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் கிட்டத்தட்ட 700 நிவாரண முகாம்களும் 265 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.