ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்கும் E3 நாடுகள்!

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் மீது ஐ.நா. தடைகளை மீண்டும் விதிக்கும் செயல்முறையை நாளைய தினம் (28.08) தொடங்க வாய்பிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் 30 நாட்களுக்குள் தெஹ்ரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த உறுதிமொழிகளை வழங்கும் என்று நான்கு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட தெஹ்ரான் மீதான தடைகளை அக்டோபர் நடுப்பகுதியில் மீட்டெடுக்கும் திறனை இழப்பதற்கு முன்பு, அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்படி மூன்று நாடுகளும் முன்னெடுத்து வருகின்றன.
மூன்று ஐரோப்பிய இராஜதந்திரிகளும் ஒரு மேற்கத்திய இராஜதந்திரியும் ஈரானிடமிருந்து போதுமான உறுதியான உறுதிமொழிகள் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையிலேயே பொருளாதார தடைகளை விதிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.