ஐரோப்பா

ஆப்பிள் வாட்ச் ‘CO2- நடுநிலை தயாரிப்பு’ அல்ல : ஜெர்மன் நீதிமன்றம்

ஆப்பிள் நிறுவனம் அதன் கைக்கடிகாரங்கள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் பொருள் என்று ஜெர்மனியில் இனி விளம்பரப்படுத்த முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் பயனீட்டாளர்களைத் திசைதிருப்பியுள்ளதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் முன்வைத்த புகாரின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

‘கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் எங்கள் முதல் தயாரிப்பு’ என்று ஆப்பிள் அதன் கைக்கடிகாரங்களை இணையத்தில் விளம்பரப்படுத்தியது.ஆனால் அதற்குரிய அம்சம் அதில் எதுவும் இல்லை என்றும் ஜெர்மனியில் போட்டித்தன்மை சட்டத்தை அது மீறுகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தங்கள் முயற்சியைத் தீர்ப்பு கீழறுப்பதாகக் கூறிய ஆப்பிள், மேல்முறையீடு செய்யப் போகிறதா என்பதைக் குறிப்பிடவில்லை.

எனினும் கரிம வெளியேற்றத்துக்கு உதவும் சின்னத்தை ஆப்பிள் கைக்கடிகாரங்களிலிருந்து நீக்கப்போவதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பேச்சாளர் சுட்டினார்.

ஜெர்மனியில் கரிம வெளியேற்றப் புள்ளிகளைப் பெறும் நோக்கில் ஆப்பிள் நிறுவனத்தைத் தவிர, மெட்டா, மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களும் கரிமத்துக்கு உகந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றன.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்