சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய வசதி

சிங்கப்பூர் – Kranji பகுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஒரு புதிய மருத்துவ நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SATA CommHealth அமைப்பு அதனை நடத்துகிறது. தீவு முழுவதும் இத்தகைய 10 நிலையங்கள் உள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களின் கலாசாரப் பின்னணியைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் தாய்மொழிகளில் பேசவும் கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்.
தொற்றுநோயாளிகளைத் தனிமைப்படுத்த வெவ்வேறு முன்பதிவுப் பகுதிகளும் ஆலோசனைப் பகுதிகளும் இங்குண்டு.
வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவச் சேவைகளைப் பெற நிலையங்களை மட்டுமே நாடவேண்டும் என்பதில்லை.
மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள செயலி மூலமாகவும் அவர்கள் மருத்துவச் சேவைகளைப் பெறலாம் என குறிப்பிடப்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)