நடுவானில் ரியானேர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி
பெண் பயணி ஒருவர் நடுவானில் அவசர கதவை திறக்க முயன்றதால் ரியானேர் விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் மொராக்கோவின் அகாடிருக்குச் புறப்பட்டது, இருப்பினும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு திசைதிருப்பப்பட்டு மான்செஸ்டர் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணத்தின் போது ஒரு பயணி அவசர கதவை திறக்க முயன்றதால் இந்த திசைதிருப்பல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மான்செஸ்டர் விமான நிலையத்திற்கு விமானம் வந்தவுடன், பயணி கிரேட்டர் மான்செஸ்டர் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.





