இலங்கையில் வேலை நேரத்தில் மாற்றங்களை கொண்டுவர தயாராகும் அரசாங்கம்
எட்டு மணி நேர வேலை நேரத்தை இல்லாதொழிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் தயாரித்து வருவதாக முன்னிலை சோசலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
எட்டு மணி நேர வேலை நாளை இல்லாதொழித்து அதற்கு பதிலாக அதிக நேரம் வேலை செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக அதன் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ குறிப்பிடுகின்றார்.
இந்த நாட்டில் தொழிலாளர் சட்டத்தை மாற்றுவதற்கு தொழிலாளர் திணைக்களமும் தொழிலாளர் அமைச்சும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த முன்மொழிவுகள் தொழிலாளர்களின் உரிமைகளை குழிதோண்டிப் புதைப்பதாகவும் அவர் கூறினார்.
ஊழியரை பணிநீக்கம் செய்யும் நடைமுறையை மாற்றி, எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யக்கூடிய வகையில் சட்டங்களைத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
(Visited 7 times, 1 visits today)