பிரித்தானியாவில் சிறுவர்களின் உணவு தொடர்பில் அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை – 18 மாத அவகாசம்

பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சீனி மற்றும் உப்பின் அளவைக் குறைக்க உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுச் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு இந்த மாற்றங்களை செயல்படுத்த 18 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகளை அறிமுகப்படுத்த வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் நடத்திய விசாரணையில், குழந்தைகள் உணவுகளில் சிலவற்றில் அளவுக்கு அதிகமான சீனி இருப்பது, அவை சத்தான உணவுகள் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
பொட்டலங்கள் வடிவில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு பெற்றோர் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் அவை குழந்தைகளின் அன்றாட உணவாக இருப்பது பரிந்துரை செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“Packed with goodness” போன்ற விளம்பரக் கோஷைகள் அறிவியல் ஆதாரமின்றி பயன்படுத்தப்படின், அந்த தயாரிப்புகள் தடை செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.